இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு துறை அலுவலர்கள் ஒவ்வொரு கரும்பு வயலிலும் சுமார் 250 கட்டு கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்வதாகவும், மீதம் கழித்து விடப்படும் கரும்புகளால் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக வயலில் உள்ள கரும்புகள் அனைத்தையும் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பூலாம்பட்டி கூட்டுறவு சங்கம் முன்பு திரண்ட காவிரி பாசன பகுதி கரும்பு விவசாயிகள் எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment