சேலம் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சேலம் காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறிய நீதிபதி போலீஸ் காவலில்வைக்க உத்தரவிட மறுத்தது தவறு என்றும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை நீதிபதி எடுக்க முடியாது எனவும் வாதிட்டார்.
அப்போது ஆஜரான துணைவேந்தர் தரப்பு வழக்கறிஞர் நடராஜன் புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை எனவும், புகாரில் எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை எனவும், இந்த பொய் புகார் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளது எனவும், இது பழிவாங்கும் நடவடிக்கைஎனவும் திட்டத்தோடு இடைக்கால ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களைக் கேட்காமல் இந்தவழக்கில் உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது.
எனவே, வரும் ஜனவரி 12-ம் தேதிக்குள் துணைவேந்தர்தரப்பு இந்த மனுவுக்கு பதிலளிக்கவேண்டும் எனவும், துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மாவட்ட நீதிபதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment