விடுதலை சிறுத்தை கட்சி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சேலம் கோட்டையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர் டாக்டர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், மொழியரசு, கருப்பையா, மெய்யழகன், தெய்வானை, சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார். வருகிற 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் தென் மாவட்ட பெருவெள்ள பாதிப்புகளை தீவிர பேரிடராக அறிவித்து ரூ. 21 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை மண்டல செயலாளர் இமயவர்மன் ஒருங்கிணைத்தார். தலைமை நிலைய செயலாளர் இளம் சேகுவாரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மண்டல துணை செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்..
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment