சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு தலைமை வகித்தார். ஆணையாளர்கள் முருகன். ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொடர்ந்து தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.கூட்டத்தில் துணைத்தலைவர் சீனிவாசன் பேசுகையில், நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார்.
அதற்கு மேலாளர் பதில் அளித்த போது, தி.மு.க. உறுப்பினர்கள் செல்வராஜ், ராஜகுமாரி, கோவிந்தம்மாள், லட்சுமி, ஜானகி உள்ளிட்டவர்கள் நிதி ஒதுக்கீடு தொடர்பான முழு விவரங்களையும் ஒருவாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதில் அளித்த ஆணையாளர் ரவிச்சந்திரன், உறுப்பினர்களுக்கு முழு விவரமும் தெரிவிக்கப்படும் என்றார்.
ஆனாலும் சமாதானம் அடையாத கவுன்சிலர்கள்கூட்டத்தை புறக்கணித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் இருந்த 7 கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment