தமிழக முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜனவரி 9ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அனைத்து அரசு பேருந்துகளை இயக்குவதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.
எடப்பாடி அரசு போக்குவரத்துகழக பணிமனையில்72அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. அதில் 175 டிரைவர்களும் 145 நடத்துனர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இன்று எடப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 72 பேருந்துகளும் முழுவதுமாக இயங்கியது. எடப்பாடி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா, எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment