ஓமலூர் அருகே அனுமதி பெறாமல் 10-க்கும் மேற்பட்ட பொக்லின் இயந்திரத்தைக் கொண்டு ஏரியில் வண்டல் மண், களிமண் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் மர்ம நபர் ஊராட்சி மன்ற தலைவர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அனுமதி பெறாமல் பத்துக்கும் மேற்பட்ட பொக்லின் இயந்திரத்தைக் கொண்டு ஏரியில் வண்டல் மண், களிமண் சட்டவிரோதமாக எடுத் துச் செல்லும் மர்ம நபருக்கு உடந்தையாக அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் சி. ஆசைத் தம்பி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச் சாட்டு எழுப்பியுள்ளனர். சேலம் மாவட்டம் ஒம லூர் அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி முள்ளூ செட் டியபட்டி பகுதியில் அமைந்துள்ளது பெத்தாம் பட்டி ஏரி. இந்த ஏரி சுமார் 10 எக்டர் பரப்பளவு கொண்டது.
S தும்பிப்பாடி ஊராட்சி மன்றம் Cஆசைத்தம்பி.இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் விவசாயிகள் களிமண் வண்டல் மண் எடுப்பதற்கான ஒரு அரசாணையை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் களிமண் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் விவசாயிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் களிமண் வண்டல் மண் எடுத்துச் செல்ல பலர் விண்ணப்பித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஓமலூர் அருகே உள்ள தும்பிப்பாடி ஊராட்சி பெத்தாம்பட்டி ஏரியல் மண் எடுப்பதற்காக ஒமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி கடந்த மாதம் 22- 8- 24 தேதியில் ஐந்து நாட்கள் மட்டுமே பெற்றுக் கொண்டு பலர் தொடர்ந்து பல நாட்களாக களிமண் வண்டல் மண்ணை எடுத்து மர்ம நபர்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதில் கொடுக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தோண்டி எடுத்துச் செல்கின்றன.
இதற்கு சூப்பர்வைசராக ராஜேந்திரன் என்பதை நியமித்து நிலையில் அவரும் இந்த மண் திருட்டுக்கு உடந்தையாகவும் இருந்து வந்த நிலையில் இதில் பலர் செங்கல் சூளைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு டாக்டர் மண்டல் மேன் களிமண் ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்து வருகின்றன.
இந்த மண் திருட்டை அரங்கேற்றுவதற்காக உடந்தையாக தும்பிப்பாடி அப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி அவருடன் பலர் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஏரியில் அரசு 60 கன மீட்டர் அனுமதி வழங்கிய நிலையில் அளவுக்கு
அதிகமான ஆழமான நிலையில் மண் எடுத்துச் செல்கின்றன. இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரத்தை கொண்டு மண் திருட்டை செய்து கொண்டிருந்தன. அப்பகுதி பொதுமக்கள் திரண்டு கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து அனைத்து வண்டிகளுடன் கிளம்பிச் சென்றனர்.அப்பகுதி பொதுமக்கள் ஒமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு
கொண்டு தெரிவித்ததற்கு நான் உடனடி நடவடிக்கை எடுக்கிறேன் என்று பதிலளித்த நிலையில் எந்த நடவடிக்கவும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment