மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 September 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.



மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.09.2024) நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:



பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு  காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும்,பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு.வீட்டுமனைப்பட்டா,வங்கிக்கடன்கள்,கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர்வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 241 மனுக்கள் வரப்பெற்றன.


மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 9 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி இன்றைய தினம் மனு வழங்கிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கரசைக்கிள் ஆட்சித்தலைவர் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மாவட்ட டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட  வழங்கல் அலுவலர் திரு.கணேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  திரு.இரா.முருகன், துணை ஆட்சியர் (பயிற்சி)

நல அலுவலர்  திருமதி.மாருதிபிரியா கலந்துகொண்டனர்.உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad