ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் எறும்பு திண்ணியை பிடித்து விற்பனை செய்த 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எறும்பு திண்ணியை பறிமுதல் செய்து வனத்தில் விட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் சிறுத்தை, மான், மாடு, எருமை, பன்றி, எறும்பு தின்னி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அதே போல நூற்றுக்கும் மேற் பட்ட பறவை இனங்களும்
வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மூன்று பேர் கொண்ட கும்பல் ஏறும்புத்தின்னியை பிடித்து விற்பனை செய்பதாக ரகசிய தகவல் வனதுறையினருக்கு கிடைத்தது இதனைத் தொடர்ந்து தனி குழு அமைத்து கும்பலை தேடி வந்தனர். அப்போது ஏற்காடு அருகே
குழுவினர் விற்பனை செய்த வாங்கியவரையும் சேர்ந்து 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment