தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் சேலம் மாவட்டத்தில் சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீர் அம்மாபாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 December 2024

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் சேலம் மாவட்டத்தில் சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீர் அம்மாபாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்


தொழில்துறை சேலம் மாவட்டத்தில் சிப்காட் அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீர் அம்மாபாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை  (22.12.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வுக்கு பின்னர் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி கிடைத்திடவும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.


குறிப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.12.2021 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும், வெள்ளிக்கொலுக உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக புதிய பன்நோக்கு உற்பத்தி மையம் அமைக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்கள்.


அந்தவகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.05.2023 அன்று சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆணைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலப்பரப்பளவில், ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் 55,000 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டும் பணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கள் நாட்டி, பின்னர் 23.09.2024 அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மினி டைடல் பூங்காவினை திரந்து வைத்து தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.அதேபோன்று 'கொலுக உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக் கூடிய சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொலுக உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பிற்கிணங்க கடந்த 25.08.2022 அன்று சேலம், அரியாகவுண்டம்பட்டியில் 1.20 ஏக்கர் பரப்பளவில் ரூ.25.29 கோடி மதிப்பீட்டில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கொலுக உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையக்கட்டடம் ஒரு தளத்திற்கு 34 கடைகள் வீதம் 3 தளங்களுடன் 102 கடைகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.


அதேபோன்று, சேலம், சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகிர் அம்மாபாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஐவரிப்பூங்காவில் நூல் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி, துணி பதனிடுதல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பயனடைவார்கள். இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதன் மூலம் சேலம் மண்டலத்தில் சுமார் 10,000 நபர்கள் நேரடியாகவும், 30,000 முதல் 40,000 நபர்கள் வரை மறைமுகமாகவும் பயனடைய வாய்ப்பாக அமையும். இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக மாண்டிமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் தொழிற்துறை வளர்ச்சிக்கேற்ப சேலம் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக விமான நிலைய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.


அதேபோன்று, ஓமலூர் வட்டம், ஆணைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலப்பரப்பளவில், ரூ.29.50 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மினி டைடல் பூங்காவினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வுகளின் போது சிப்காட் மேலாண்மை இயக்குநர் திரு.செந்தில் ராஜா, இ.ஆப, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அருள், விமான நிலைய இயக்குனர் திருவைதேகிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெமேனகா, விமான நிலைய உதவி இயக்குநர் திரு.ரமேஸ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad