அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி வருகின்ற 21.12.2024 அன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி வருகின்ற 21.12.2024 அன்று சேலத்தில் நடைபெறவுள்ளது.



சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி வரும் 21.12.2024 அன்று சேலம் 8. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தெரிவித்துள்ளதாவது: இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள்



சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா முதல்நிலைப் போட்டி தேர்வு 21.12.2024 சனிக்கிழமை அன்று சேலம்-8. அரசு மகளிர் கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.



மேலும், தேர்வாளர்கள் தேர்வு நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்திற்கு வருகைபுரிய வேண்டுமெனவும், தேர்வின்போது கைப்பேசி அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தேர்வு கொள்குறி வகை (Objective Type Test) முறையில் நடைபெற உள்ளது.



மேலும், சேலம் மாவட்டத்தில் இப்போட்டியில் தகுதிபெறும் மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 28.12.2024 அன்று நடைபெறும் இறுதி போட்டித்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 2 இலட்சம். இரண்டாம் பரிசு ரூபாய் 1.50 இலட்சம், மூன்றாம் பரிசு ரூபாய் 1 இலட்சம் மேலும், சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள். அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி, பட்டயக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். முதன்மை கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர். தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வாயிலாக அனுப்பப்படும் Google Form-இல் போட்டியாளர்கள் 20.12.2024 பிற்பகல் 5.00 மணிக்குள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டில தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களை 90927 86963 என்ற எண்ணிலும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை 94436 63441 என்ற எண்ணிலும், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்) அவர்களை 90804 07007 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

Post Top Ad