முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சேலம், சூரமங்கலம் உழவர் சந்தை தொடங்கி வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் இன்று (23.12.2024) உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் திரு.ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்..
No comments:
Post a Comment