சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள சௌந்தர்ராஜன் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அதே பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரியில் தெப்ப தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 43 ஆண்டுகளாக ஏரி நிரம்பாததால் சாமியை புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று தலையில் தூக்கிச் சென்று வழிபாடு செய்து வந்தனர். தற்பொழுது 43 ஆண்டுகளுக்கு பிறகு பெரியேரி நிரம்பியுள்ளதால் நான்கு பரிசல்களை பலகைகள் மூலம் இணைத்து அதில் சௌந்தர்ராஜன் பெருமாள் சாமியே தெப்பத்தேர் விழாவிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது அதிக பாரம் தாங்காமல் பரிசல் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து கோவில் நிர்வாகத்தினர் மீண்டும் பரிசீல்களை சீரமைத்து குறைவான ஆட்களை கொண்டு சாமியை தப்ப தேர்த்திருவிழாவிற்கு அழைத்துச் சென்றனர். 43 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தெப்ப தேர்வு விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் முனைப்புடன் காத்திருந்த நிலையில் பரிசல் தண்ணீரில் மூழ்கியதால் எடப்பாடி போலீசார் கோவில் நிர்வாகத்தினரை மட்டுமே பரிசலில் செல்ல அனுமதி அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment