எடப்பாடியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

எடப்பாடியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை.

சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது அதை தொடர்ந்த இன்று எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்று வீசி இடியுடன் கூடிய கனமழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் எடப்பாடி பேருந்து நிலையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் விஷ சந்துக்கள் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் வீட்டுக்குள் செல்வதை முற்றிலும்  நகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எடப்பாடி பகுதியில் கனமழையால் எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad