அதைத்தொடர்ந்து எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்று வீசி இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் எடப்பாடி பேருந்து நிலையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் விஷ சந்துக்கள் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் வீட்டுக்குள் செல்வதை முற்றிலும் நகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எடப்பாடி பகுதியில் கனமழையால் எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment