தொடர் விடுமுறை காரணமாக பூலாம்பட்டி படகு துறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

தொடர் விடுமுறை காரணமாக பூலாம்பட்டி படகு துறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி படகுத்துறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை தொடர்ந்து பூலாம்பட்டி படகு துறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். 


தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர்,ஈரோடு, நாமக்கல், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் விசைப்படையில் சென்று இயற்கை அழகை கண்டு காவேரி ஆற்றில் நீராடியும் மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad