தமிழகத்தில் நவராத்திரி விழா பண்டிகை முன்னிட்டு எடப்பாடியில் உள்ள வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு.
தமிழக முழுவதும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாவாந்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் மற்றும் வீடுகளில் நவராத்திரி விழாவை தொடர்ந்து இல்லங்களில் ஒன்பது நாட்கள் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
நவராத்திரியின் முக்கிய கடைசி நாளான இன்று எடப்பாடி பகுதியில் உள்ள வீடுகளில் நவராத்திரி கொலு வைத்தும் பக்தி பாடல் பாடியும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நவராத்திரி கொலு பூஜையில் கலந்து கொண்ட திருமணம் ஆகிய பெண்களுக்கு மாங்கல்ய கயிறு,சிவப்பு,மஞ்சள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment