எடப்பாடியில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பட்டறை வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

எடப்பாடியில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பட்டறை வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் எடப்பாடியில் இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறை வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

எடப்பாடி அடுத்த நைனாம்பட்டி பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார்.  மாவட்ட துணைச் செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி , வழக்கறிஞர் பிரசன்னா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு திராவிட மாடல் என்ற தலைப்பில், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், மொழி போராட்டம், நாட்டின் பொருளாதார சூழ்நிலை, வரலாற்று நிகழ்வுகள்  உள்ளிட்ட பல்வேறு  கருத்துக்களை விவரித்து பேசினர். 


நிகழ்ச்சியில்  நகர செயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர் பரமசிவம், நல்லதம்பி மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி,விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவு தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad