விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தீயணைப்பு துறையினர் தீ விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன், துணை நிலைய அலுவலர் கருணாநிதி உள்ளிட்டோர் தலைமையிலான தீயணைப்பு துறையினர், எடப்பாடி பேருந்து நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை கல்லூரி வளாகம் மற்றும் எடப்பாடி பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு தீ விபத்தினை தடுத்தல் குறித்தும், தீ விபத்து ஏற்படும் சமயங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, தீ விபத்தில்லா தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடிட வேண்டுமென விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment