எடப்பாடியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்கீடு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

எடப்பாடியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்கீடு.

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமியிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர். 

இதனை அடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் வகுப்பறையில் அமைத்திட ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை அடுத்து அப்பகுதியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. 


இதில் நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம் முருகன், முன்னாள் நகர மன்ற தலைவர் டி.கதிரேசன் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் ரவி, நாராயணன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர். 


-தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad