வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த பூலாம்பட்டி படகு துறையில் சீரமைக்கும் பணிகள் தீவிரம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த பூலாம்பட்டி படகு துறையில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்.

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில், அண்மையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த விசைப்படகு துறை நடைமேடையினை, சீர் செய்திடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி கதவணை நீர்த்தேக்கதில் நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் அணையின் நீர்ப்பரப்பில், சேலம் மாவட்டம் பகுதியான  பூலாம்பட்டி  மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், இரு மாவட்டங்களுக்கு இடையே   விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால், நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு பூலாம்பட்டி விசைப்படகு துறையின் பயணிகள் நடைமேடை முழுவதும், தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கொடுக்க முடியாமல், திடீரென  ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது. 


மேலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் பயணச்சீட்டு நிலையம் உள்ளிட்டவை அபாயகரமான நிலையில் இருந்ததால், மேலும் அப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் கூடிய சூழ்நிலையை அறிந்த பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்  ஜீவானந்தம் மற்றும் பூலாம்பட்டி பேரூராட்சி தலைவர் அழகுதுரை உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தற்காலிக சீரமைப்பு பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டனர். 


இதனை அடுத்து அப்பகுதியில் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கும்  பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் அப்பகுதியில் நிரந்தர கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார். 


- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad