பூலாம்பட்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

பூலாம்பட்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

எடப்பாடி, அண்மையில் காவிரி ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார். 

அண்மையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனை அடுத்து அணையில் இருந்து கூடுதலான அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதியான, பூலாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு விசைப்படகு போக்குவரத்து பயன்பாட்டிற்கான நடைமேடை வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்தது. 


மேலும் பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் தொடர் கனமழையால் வாழை, நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனை அடுத்து நேற்று மாலை அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், படகு துறை உள்ளிட்ட வெள்ளப் பெருக்கால் சேதம் அடைந்த  பகுதிகளை விரைவாக சீர் செய்திடவும், காவிரி கரையோர பகுதிகளில்  கூடுதலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 


ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வட்டாட்சியர் லெனின், வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad