எடப்பாடி நகர பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக குடியிருப்புக்குள் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் உண்ண உணவின்றி உடைமைகளை இழந்து தவித்து வந்தவர்களை வருவாய்த்துறையினர் எடப்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் முகாம் அமைத்து அதில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வருவாய்த்துறையினர் வழங்கி வரும் நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முகாம்களில் தங்க வைத்துள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு குடிநீர் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பாதிக்காமல் இருப்பதற்காக வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த போதும் அதனை பொறுப்பெடுத்தாது எடப்பாடி நைனாம்பட்டி பகுதியை சேர்ந்த கௌதம், ஐயப்பன் இரண்டு இளைஞர்களும் சரபங்கா நதியில் குளிக்க முற்பட்டபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி எம் செல்வகணபதி ஆகியோர் சரபங்கா நதியில் இளைஞர்கள் அடித்துச் செல்லப்பட்ட பகுதியை கொட்டும் மழையில் நனைந்த வாரே ஆய்வு மேற்கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment