எடப்பாடி அருகே விடிய விடிய கன மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மழை நீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதிகள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைத்துள்ளனார்.
இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் மிக கன மழையால் எடப்பாடி அருகே மேட்டுத்தெரு பகுதியில் ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் அதன் உரிமையாளர் ராணி வயது 60 என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார், இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரை மீட்டு எடப்பாடி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில் மழை நீர் வடிகால்களில் ஆதரவுகள் அதிகரித்துள்ளதாலேயே மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகள் புகுவதால் இது போன்ற உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் அரசும் முனைப்பு காட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment