கொங்கணாபுரம் அடுத்த கரட்டூர் பகுதியில் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில் திரண்டு அதிமுகவினர் அங்கு அதிமுக கொடியினை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் 51 வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நகரமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம் முருகன் தலைமையில் திரண்ட அதிமுகவினர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் டி.கதிரேசன், கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் நாராயணன், ரவி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர் மாதேஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மரக்கன்றுகள் நட்டும் அதிமுகவின் 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுங்குளம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் திரண்ட அதிமுகவினர் அங்கிருந்த விவசாய தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மட்டும் கல்வி உபகரணங்களை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment