எடப்பாடி பேருந்து நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் அன்று வைக்கப்பட்ட பேனர் சரிந்து மின்சார ஒயர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் வைத்த பேனர் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையிலும் எடப்பாடி பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி இன்றி பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் இன்று மாலை சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சரிந்து மின் ஒயர் மீது சாய்ந்து நின்றது. மழை பெய்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறையும் நகராட்சி நிர்வாகமும் சட்டவிரோதமாக பேனரை வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது இது போன்ற அசம்பாவிதங்களுக்கு வித்திடுகிறது.
மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பொது இடங்களில் கட்சி நிகழ்வுக்கும் பொது நிகழ்வுக்கும் விளம்பரத்திற்காகவும் பதாகைகளை வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment