காவிரியில் வெள்ளப்பெருக்கு பூலாம்பட்டி படகுத்துறை இடிந்து விழுந்தது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

காவிரியில் வெள்ளப்பெருக்கு பூலாம்பட்டி படகுத்துறை இடிந்து விழுந்தது.

எடப்பாடி, காவிரி ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் உள்ள விசைப்படகு தளம் இடிந்து விழுந்தது..காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

இந்நிலையில் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள காவிரி கதவணை  நீர்தேக்க நிலையத்தில்  சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட  பகுதியில் உள்ள நெருஞ்சிப்பேட்டையை  இணைக்கும் வகையில் நீர்வழி விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 


விசைப்படகு பயணிகள் பயன்படுத்தும் வகையில் பூலாம்பட்டி பகுதியில் படகுத்துறை அருகே காவிரி ஆற்றின்  கரையை  ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைமேடையானது, வெள்ளப்பெருக்கால் திடீரென இடிந்து விழுந்தது சுமார் 150 அடி தூரம் நடை மேடை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. மேலும் அதன் அருகில் உள்ள  மின்கம்பங்களும் மற்றும் பயண சீட்டு விற்குமிடம் உள்ளிட்டவை  அபாயகரமான நிலையில் உள்ளது. 


திடீரென  நடைமேடை சரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர், நல்வாய்ப்பாக அப்பகுதியில் ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகம் தடைகளை  அமைத்திருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் காவிரியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், இப்பகுதியில் பாதிப்பு அதிகரிக்க கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். 


சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக அப்பகுதியை பார்வையிட்டு சேதத்தை சரி செய்வதுடன் மேலும் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை  செய்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad