பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 45 மாணவ, மாணவிகள் காயம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 October 2022

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 45 மாணவ, மாணவிகள் காயம்.

எடப்பாடி அருகே ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து, காயம் அடைந்த 45க்கும் மேற்பட்ட மாணவ மாணவ மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காப்பக ஊழியர்கள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றதால் குழந்தைகள் மிகுந்த அவதிக்க ஆளானார்கள். இந்த விபத்துக்கு குறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னமுத்தூரில் இயங்கி வரும்  பிருந்தா என்ற ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எடப்பாடி மற்றும் ரெட்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக வாகனம் ஏற்பாடு செய்து அதன் மூலம் குழந்தைகள் தினம் தோறும் பள்ளிக்குச் சென்று இருந்தனர். 


இந்த நிலையில் இன்று பள்ளி முடிந்து காப்பதற்கு வாகனத்தில் மாணவிகள் சென்று கொண்டிருந்த போது சின்னமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமின்றி மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இருந்த போதிலும் 45க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு காயம் ஏற்பட்ட போதும் காப்பக நிர்வாகம் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றதால் காயம் அடைந்த மாணவிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். 


சுமார் ஒரு மணி நேர கால தாமதிர்க்கு பிறகு காயம் அடைந்த மாணவிகளை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை படம் எடுக்க சென்ற பத்திரிகையாளர்களை காப்பக பெண் நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad