சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி சார்பில் இன்று சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீருடை வழங்கும் நிகழ்ச்சி எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.
சீருடை நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டுரைப் போட்டி,பேச்சு போட்டி,ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா பரிசு வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்,ஆசிரியர்கள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment