எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் பில்லுக்குறிச்சி, சுள்ளிமுள்ளுர், உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களில் செல்லும் பிரதான சாலை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வழுக்கி கீழே விழுவது மட்டுமல்லாமல், விஷ ஜந்துக்கள் தாக்கும் அபாயத்தையும் கடந்து சொல்லும் சூழ்நிலையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற அதிகாரிகள் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் அல்லது ஏரி எழுந்து வழிந்து செல்லும் தண்ணீர் சாலையை மூழ்கடிக்காமல் செல்லும் வகையில் மாற்று பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:
Post a Comment