எடப்பாடி சுற்று வட்டார பகுதி திரு கோவில்களில் அன்னாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமி திதியை ஒட்டி எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்வில், முன்னதாக நஞ்சுண்டேஸ்வர சுவாமிக்கு பால், தயிர், தேன், கற்கண்டு, பழம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாதத்தால் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் வெள்ளநாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரர் ஆலயம், வெள்ளாண்டி வலசு முல்லைவன நடராஜர் சன் நிதி, வெள்ளரி வெள்ளி ஈஸ்வரன் கோவில், பூலாம்பட்டி கைலாசநாதர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சாமிக்கு படையல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment