மாவட்ட திமுக சார்பில் எடப்பாடியில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 November 2022

மாவட்ட திமுக சார்பில் எடப்பாடியில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் எடப்பாடியில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  எடப்பாடி பஸ் நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம் செல்வகணபதி தலைமையற்றார். நகரச் செயலாளரும் நகர மன்ற தலைவர் மான டி.எஸ்.எம் பாஷா வரவேற்று பேசினார். 

மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் முரளி, கவிஞர் பெர்னாட்ஷா ஆகியோர் மத்திய அரசின்  இந்தி மொழி கொள்கையினை எதிர்த்தும். இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் நிலையில், தமிழ் மொழிக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்கள் மற்றும் தமிழர்களுக்கான அடையாளங்கள் அளிக்கப்படும் என பேசினர். இதனை தொடர்ந்து பேசிய சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம் செல்வகணபதி பேசுகையில்:

தற்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசு பல்வேறு மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருவதாகவும், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்றதால்,  அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விளைவு உயர்ந்து, நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாகவும், பாஜக ஆட்சி காலத்தில் ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்ததால், நாட்டின் பண வீக்கம் அதிகரித்து உள்ளதாகவும், தனிப்பட்ட மத உணர்வுகளை தூண்டும் வகையிலும் சிறுபான்மையினர் பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் திசை திருப்பும் நோக்கில் மத்திய அரசு இந்தி திணிப்பை கொண்டு வர முயற்சிப்பதாகவும் இதற்கு திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது என பேசினார்.  இதில் திமுகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்... 


- செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad