தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் அரசு அச்சிடப்பட்ட சரத்துகளை படிக்காமல் அம்பேத்கர், பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் புறக்கணித்தார். மேலும் தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணித்து தமிழகம் என தொடர்ந்து உச்சரித்தார்.

தமிழகத்தில் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் பல கருத்துகள் மாநில அரசின் நிலைப்பாடுக்கு எதிராகவே உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் ஆளுநரை கண்டித்து எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழக ஆளுநர் ஆரன் ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உரக்கச் சொல்வோம் தமிழ்நாடு, நல்லா சொல்வோம் தமிழ்நாடு, அழுத்திச் செல்வம் தமிழ்நாடு, திரும்பச் சொல்வோம் தமிழ்நாடு உள்ளிட்ட கோஷத்தை எழுப்பியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment