சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி பாசன பகுதியில் செங்கரும்பு அறுவடை பணி தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவதற்காக பூலாம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செங்கரும்புகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதையோட்டி கடந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை 32 ரூபாய்க்கு விலை போன கரும்பு நடப்பாண்டில் ஒரு கரும்பின் விலை 18 ரூபாய்க்கு பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். மேலும் 6 அடி உள்ள கரும்பினை மற்றும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதால் ஐந்து முதல் ஐந்தரை அடி உள்ள கரும்புகளை கூட்டுறவு சங்க அதிகாரிகள் கழிப்பதால் விவசாயிகள் கடும் வேதனையை அடைந்து வருகின்றனர்.
மேலும் பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செங்கரும்பு விவசாயிகள் கூடுதல் விலை சேர்த்து தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment