சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கச்சுப்பள்ளி பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக தொடர் கனமழை பெய்து வந்ததை ஒட்டி அய்யம்பாளையம் ஏரி நிரம்பி சாலை மற்றும் ரேஷன் கடைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் செல்லும் போது கீழே வலிக்கி விழும் அவல நிலை உருவாகி வருகிறது.

அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் கழிவு நீரை ஏரில் விடுவதால் அப்பகுதி வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நியாய விலை கடையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடந்த இரு மாதங்களாக ரேஷன் பொருட்கள் இரண்டு மாதங்களாக வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். சாலை மற்றும் நியாய விலை கடையில் தேங்கியிருக்கும் தண்ணீரை உடனே அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- எடப்பாடி செய்தியாளர் : வெங்கடாசலம்.
No comments:
Post a Comment