சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் காலை ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக பூலாம்பட்டி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் எடப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு ஆண் சடலத்தை மீட்டனர்.
போலீசார் விசாரணையில் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரைச் சேர்ந்த சரவணன் (45) நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை வெள்ளிவெள்ளியிலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து விட்டு மீண்டும் வெள்ளித்திருப்பூர் செல்வதாக கூறி சென்றவர். இன்று காலை வெள்ளரிவெள்ளி ஏரியில் சடலமாக கிடந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சடலத்தை கைப்பற்றிய பூலாம்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த மருமகன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment