சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சியிலுள்ள ஸ்ரீதுர்க்கை செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பர்தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட தண்ணீர் நிரம்பி வழியும் வெள்ளரிவெள்ளி ஏரியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீ துர்க்கை செல்லாண்டி அம்மன் சுவாமியும், ஸ்ரீவரதராஜ பெருமாள் சுவாமியும் தெப்பத்தில் வைத்து ஏரியை சுற்றி வந்தும் தண்ணீரிலேயே தெப்பத்தேர் மூன்று முறை சுற்றியும் அருள்பாலித்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பரவசமடைந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

No comments:
Post a Comment