சேலம் மாவட்ட நூலக ஆணைக்குழு - மேட்டூர் கிளை நூலகம், மேட்டூர் கிளை நூலக வாசகர் வட்டம், பனை இலக்கிய வட்டம் மற்றும் மகிழினிப் பதிப்பகம் இணைந்து நடத்திய எழுத்தாளர் சிலம்பரசன் அவர்களின் முதற்படைப்பான 'பிசிர்' குறுநாவல் குறித்த திறனாய்வுக் கூட்டம் டிசம்பர் 24, 2022, சனிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் மேட்டூர் கிளை நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெ.அஜித்குமார் வரவேற்புரை வழங்கினார்.
தோழர் மே.கா.கிட்டு தலைமை வகித்தார். தோழர் அனுராதா லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார். மகிழினிப் பதிப்பக உரிமையாளர் சுபி.முருகன் நூல் அறிமுகவுரையாற்றினார். ஆசிரியர் கு.பாரி அவர்களும், கவிஞர் அ.சின்னசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
குறும்பட இயக்குநர் ச.நவீன் சிறப்புரையாற்றினார். ஜ.க.நாகப்பன், ஆ.மைதிலி, மெய்.சீனிவாசன், சே.விஜயராகவன் ஆகியோர் நூல் திறனாய்வுரை வழங்கினர். நூலாசிரியர் சிலம்பரசன் ஏற்புரையும், சு.ஷண்முகப்பிரியா நன்றியுரையும் வழங்கினர்.
இந்நிகழ்வை மேட்டூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் க.சந்திரமோகன், நூலகர்கள் மா.நாகலட்சுமி மற்றும் கோ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் ஓவியர் கோகுலவாணி தமிழ்ப்பரிதி உள்ளிட்ட பல இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment