சேலம் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 November 2022

சேலம் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம்.


எடப்பாடியில் பாஜக சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர்  ரவி, சிறுபான்மையினர் அணி மாவட்டத் தலைவர் முபாரக் அலி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கலைச்செல்வன், திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலூர் இப்ராஹீம் மற்றும் மாநில துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் உள்ளிட்டோர், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினர். குறிப்பாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு கொண்டுவரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுகவினர் தாங்கள் கொண்டு வந்த திட்டம் போல் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாஜக விற்கு எதிராக பல்வேறு நிலையில், மொழி பிரச்சனைகளை எழுப்பி சுயநல அரசியல் செய்வதாகவும் உண்மையை தமிழக மக்கள் வெகு சீக்கிரம் உணர்வார்கள் என்றும் கூறினர். பாஜக சிறுபான்மையினருக்கு பெரியதொரு அரனாக இருப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும் பேசினர்.


கூட்டத்தில் பாஜக மாநில பொறுப்பாளர்கள் சகிலாபானு, கோபிநாத், சவுந்தரராஜன், பாலசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தர்மராஜா, சிவலிங்கம், சந்திரன் செங்கோட்டுவேல் உள்ளிட்டோர் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.


- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad