உலக குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தினத்தை முன்னிட்டு, காவல் துறை சார்பில் எடப்பாடியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 November 2022

உலக குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தினத்தை முன்னிட்டு, காவல் துறை சார்பில் எடப்பாடியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குழந்தை பருவத்தினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தவறான வழி நடத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்தல் குறித்த விழிப்புணர்வு வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக அங்கு திரண்டு இருந்த பள்ளி  மாணவர்கள் மத்தியில் பேசிய காவல் ஆய்வாளர் சந்திரலேகா, தற்போதைய சமூக சூழலில் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பல்வேறு பாலியல் குற்றங்கள் குறித்தும் அவற்றிலிருந்து மாணவ, மாணவிகள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார். 


மேலும் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, யாரேனும் குழந்தை பருவத்தினரை  துஷ்பிரயோகப்படுத்த முயலும் போது, மாணவர்கள் அது குறித்து காவல்துறைக்கு தெரிவித்து உதவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார் தொடர்ந்து  விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். 


- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad