
இந்நிலையில் நாகம்மாள் தனது வீட்டில் இருந்து எடப்பாடி நோக்கி தனது மகள் வசந்த மாலாவுடன் ஒரு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் வசந்தமாலா இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று நிலையில் அவரது தாயார் நாகம்மாள் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில் உள்ள தாவாந்தெரு காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு வேகத்தடையினை கடப்பதற்காக வசந்தமாலா இருசக்கர வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளார்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென நாகம்மாள் கழுத்தில் இருந்து சுமார் 5 1/2 சவரன் மதிப்புள்ளான தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசி டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த இளைஞர் ஒருவர் நாகம்மாள் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று, நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசி டிவி பதிவுகளை ஆய்வு செய்துவரும் போலீசார், தப்பிச்சென்ற கொள்ளையனை தீவிரமாக தேடிவருகின்றனர்.
எடப்பாடிப் பகுதியில் பட்ட பகலில் நடைபெற்ற இத்துணிகார கொள்ளை சம்பவம், அப்பகுதி பெண்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment