சேலம் மாவட்டம் இரண்டாவது அக்ரகாரம் காசி முனியப்பன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த பைரவர் குடிலில் புதன்கிழமை (16/11/2022) அன்று ஸ்ரீ கால பைரவர் ஜென்மாஷ்டமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆனந்த பைரவருக்கு ஜென்மாஷ்டமி யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இப்பூஜையில் ஸ்ரீ ஆனந்த பைரவருக்கு சிறப்பு பூஜையாக, யாகம் வளர்த்தல், கணபதி ஹோமம்,அஷ்ட பைரவர் ஹோமம், குபேர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் வம்சவிருத்தி ஹோமம், போன்ற ஹோமங்கள் சிறப்பாக ஸ்ரீ ஆனந்த பைரவருக்கு செய்யப்பட்டது. இந்த யாகத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ஆனந்த பைரவரை தரிசித்து, அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment