எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 November 2022

எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.


எடப்பாடி நகர பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அலுவலர்கள், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்து, வாடகை செலுத்தாத  கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கினர்.

எடப்பாடியில் பஸ் நிலையப் பகுதியில் அண்மை காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லவும், பயணிகள் நடைமேடையை கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், நகராட்சி ஆணையாளர் சசிகலா தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் எடப்பாடி பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 


குறிப்பாக குமாரபாளையம் வழித்தடம் மேட்டூர் மற்றும் ஈரோடு பகுதி பஸ்கள் வந்து செல்லும் நடைமேடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அலுவலர்கள், அப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகளை ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் கழிவுநீர் அகற்றல், குப்பைகளை பராமரித்தல் மற்றும் பயணிகள் பாதிக்காதவண்ணம் வணிகம் செய்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 


மேலும் எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் நீண்ட காலமாக வாடகை பாக்கி வைத்துள்ள கடை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் வழங்கிய நகராட்சி அலுவலர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்குள் பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள பாக்கித்தொகை முழுவதும் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்த தவறும் கடை உரிமையாளர்களின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.


- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad