சேலம் மாவட்டம்,எடப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கன மழை பெய்து வந்ததை ஒட்டி எடப்பாடி பகுதியை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வழிகிறது. அதைத்தொடர்ந்து எடப்பாடி அடுத்த வெள்ளநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட அச்சம்பட்டி ஏரி 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது.
இதனால் அச்சம்பட்டி சுற்றியுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட ஏக்கரா நிலங்கள் பாசன பயறும் என்று அச்சம்பட்டி ஏரி 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கிடாவெட்டி மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
- சேலம் செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:
Post a Comment