மானத்தால் வேட்டாய பெருமாள் தெப்பத்தேர் திருவிழா.. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 December 2023

மானத்தால் வேட்டாய பெருமாள் தெப்பத்தேர் திருவிழா..


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள அருள்மிகு சோரகை மலையை ஸ்ரீ வேட்டராய பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி மற்றும் துவாதசியன்று வருடம் தோறும் தெப்ப தேர் திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெறும். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து தேர்வு உற்சவத்தை பார்த்து மகிழ்வார்கள்.

அதன்படி இந்த வருடம் ஸ்ரீ வேட்டராய பெருமாள் சுவாமி கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் இருந்து புஷ்ப பல்லக்கில் சோரகை மலையில் உள்ள கோவிலுக்கு  சென்றடைந்த பின் மலைக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மானத்தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவி ராய சுவாமி கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு. மானத்தால் ஏரிக்காயில் இருந்து புஷ்ப பல்லக்கில் ஏரியின் ஒரு புறத்திலிருந்து புறப்பட்ட தேர் மறுபுறத்தை சென்றடைந்தது. 


இதில் பந்த வேடிக்கையும்,வானவேடிக்கும் வெகு சிறப்பாக நடைபெற்றது.பக்தர்களின் பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அதே பகுதியில் ரயில் தண்டவாளம் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ரயில்வே துறை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஏற்படுத்தப்பட்டிருந்தார்கள் . இதில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.


- தமிழக குரல் செய்தியாளர்  S.வெங்கடேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad