இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருத்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் நேற்று இரவு முதல் கூட்டு பிரார்த்தனைகள் கூட்டங்கள் நடைபெற்றன குழந்தைகள் மற்றும் மக்களை மகிழ்ச்சியடைய செய்வதற்காக கிறிஸ்துமஸ் வேடமடைந்து பாடல் பாடி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள உயரமான கிறிஸ்துமஸ் மரங்களுக்கு மின்விளக்குகள் பளிச்சிட கண்ணை கவர்ந்த வண்ணமாக காணப்பட்ட இதை தொடர்ந்து இரவு தொடங்கிய சிறப்பான பாடல் கிறிஸ்துமஸ் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பாலியின் ஆராதனையில் 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தாடை உடுத்தியும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டும் கிறிஸ்துமஸ் பிறப்பை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ்.
No comments:
Post a Comment