சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் இலுப்ப நத்தம் கிராமத்தில் வாழ்ந்து வரும் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் யுவராஜ் வயது 23 கோவை இந்துஸ்தான் கல்லூரியில் Bcom இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் மற்றும் புஷ்பராஜ் வயது 19 ஐடிஐ படித்து வரும் இரு மாணவர்களை 22ந் தேதி வீரகணூர் காவல் துறையினர் அருகில் மின் மோட்டார் திருடுபோயுள்ளது விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அடித்து சித்ரவதைகள் செய்துள்ளனர்.
மேலும் நான் கோவையில் தனியார் கல்லூரியில் படிக்கின்றேன் நாங்கள் அது போல தவறு எதுவும் செய்யவில்லை என்று சொல்லியும் டேய் எங்கள் பிள்ளைகளை யே நான் தனியார் கல்லூரியில் படிக்கவைக்க முடியவில்லை குறப்பசங்க உங்களுக்கு எங்கிருந்துடா பணம் வருது திருடிய பணத்தில் தான் படிக்கிறீங்களா என்று சாதியின் பெயரைச் சொல்லி அடித்துள்ளனர் ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டு மறுநாள் காலை பத்து மணிக்கு வரச்சொல்லி மிரட்டி அனுப்பியுள்ளனர்.
மறுநாள் காலை ஆத்தூர் மலைக்குறவன் சங்கத்தின் நிர்வாகிகள் ஆத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் தோழர் முருகேசன் தலையிட்டுமாணவர்கள்ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment