தொளசம்பட்டி அப்பரமெய பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 December 2023

தொளசம்பட்டி அப்பரமெய பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு.


ஏகாதசிகளில் மிகவும் முக்கியமானதாக வைணவர்களால் போற்றப்படுவது வைகுண்ட ஏகாதசி இன்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கத்தை அடிப்படையாக வைத்தே சொர்க்கவாசல் நேரம் கணக்கிடப்படும் என்பதால் ஸ்ரீரங்கத்தை தொடர்ந்து திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய வைணவ திருத்தலங்களிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பெருக்கில் முழக்கமிட்டபடி நம்பெருமாளை தரிசித்தனர். மார்கழி மாத பஜனை குழு நண்பர்களும் நம்பெருமாளை தொடர்ந்து பக்தர்களும் சொர்க்கவாசல் கடந்து சென்று, பெருமாளை தரிசித்தனர்.


திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் தரிசித்த பிறகு பக்தர்கள் ஏகாதசி விரதம் இருந்து,வைகுண்ட ஏகாதசியை யொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது..


- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad