தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். இதனை தொடர்ந்து தீவுத்திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றடையும் என்று தேமுதிக அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் தொளசம்பட்டி ஊராட்சியில் உள்ள தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள் இதில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்..
No comments:
Post a Comment