தாரமங்கலம் நகராட்சியில் 10, 11, 13, 17 மற்றும் 18-வது வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தாரமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேட்டூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சிவசுப்ரமணிய பிள்ளை, ஓமலூர் தாசில்தார் (பொறுப்பு) ஹசின்பானு, தாரமங்கலம் நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் வருவாய்த்துறை மின்சார வாரியம், ஊராட்சி மற் றும் நகராட்சி பொது சுகாதாரம், மாற்றுத்திறனாளிகள், சமூக நலன், வாழ்வாதார கடன் உதவிகள், மகளிர் உரிமைத்தொகை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் தனித்தனியாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பதிவு செய்துள்ளனர். பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) வருகிற 3 மற்றும் 4- ந் தேதிகளிலும் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment