மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற பெயரில் ஏமாற்றும் பேர்வழிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா தகவல். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 December 2023

மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற பெயரில் ஏமாற்றும் பேர்வழிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா தகவல்.

மாதிரி படம்.

சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: - முதலீடு செய்யும் பணத்திற்கு 18 முதல் 20 சதவீதம் வரை வட்டியானது மாதந்தோறும் வங்கியில் செலுத்தப்படும். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு குலுக்கல் சீட்டு, மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற பெயரில் கட்டிய பணத்திற்கு அதிக வட்டி மற்றும் பரிசு பொருட்கள் தருகிறோம் என்று கூறும் மோசடி கும்பல் குறித்தும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

வீட்டு மனைத்திட்டம், நகைக்கடை தொடங்கி மாதம் பணம் செலுத்தினால், தங்கம் வழங்குகிறோம். பங்கு சந்தை, பிட்காயின், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்தால்,ஒரு ஆண்டில் இருமடங்கு பணம் தருகிறோம். மரம், மூலிகை செடி, கோழி, ஆடு வளர்ப்பு போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் அதிகம் பணம் தருகிறோம் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.எனவே முதலீடு செய்தால் அதிகம் பணம் தருகிறோம் என்று கூறும் மோசடி கும்பல் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு அல்லது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் பணம் மோசடியை தவிர்க்கவே இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.. 

No comments:

Post a Comment

Post Top Ad